தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அளவில் அடங்கவில்லை.
சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளுக்கு குயிட் பண்ணுடா எனும் பாடலின் வரிகள் வீடியோ வெளியாகி, சிறந்த வரவேற்பினை பெற்றது.
இந்த வரிகள் வீடியோ பாடலில், மாஸ்டர் படத்தில் இருந்து விஜய்யின் புதிய புகைப்படங்களும் வெளியாகியது. இதில், விஜய் மதுவை தனது கையில் வைத்திருப்பது போல் புகைப்படங்களும். சிலதில், சோகத்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியது.
இந்நிலையில் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள், இந்த புகைப்படங்களுடன் விஜய் சேதுபதியை கனகச்சிதமாக இணைத்து, வேற லெவல் புகைப்படங்களை வடிவமைத்துள்ளனர்.
இதனால் மாஸ்டர் படத்திலும் இப்படியொரு சீன் இருந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ நீங்களே பாருங்கள்…
#Master @actorvijay , @VijaySethuOffl pic.twitter.com/aKeHuCybWI
— #Master (@MasterMovieOffi) October 17, 2020