ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ள விரும்பும் மக்கள் தபால், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பிற்காக சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கு அமைய இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லாமல் பொதுமக்கள் தமது தேவைகளை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பு பிரிவின் 011 4 354 550 மற்றும் 011 2 354 550 என்ற தொலைபேசி இலக்கத்திலும் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதி தொடர்பிலும் தொடர்பு கொள்ள முடியும்.
அல்லது publicaffairs@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.