கொரோனா பவரலை அடுத்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் தொழிற்சாலை பணியாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டமை, தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத அடிப்படையில் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பற்ற தனிமைப்படுத்தப்பட்ட சட்டவிரோத மற்றும் தன்னிச்சையாக சுற்றி வளைத்தல் மற்றும் தடுப்புக்காவல் செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை அடிப்படையாகக் கொண்ட அவர்களின் இயக்க சுதந்திரம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாக இந்த செயல் அமைந்திருந்தாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை 98 ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களாவர்.
படையினரின் இந்த நடவடிக்கை குறித்து இராணுவத்தளபதி சவேந்திர சில்வா விசாரணை நடத்தவேண்டும் என்று முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.