அமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது சிறுமி தனது தாயின் நிர்வாண புகைப்படத்தினை கைப்பேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எமிலி ஷ்மிட் என்கிற 30 வயதான பெண்மணி தனது இரண்டு வயது குழந்தையிடம் கைப்பேசியை விளையாடுவதற்காக கொடுத்துள்ளார்.
குளித்து முடிந்து வந்து நிர்வாணமாக முடியை காய வைத்துக்கொண்டிருக்கையில் குழந்தை தாயின் பின்னாலிருந்து சில புகைப்படங்களை எடுத்து அதை கைப்பேசியில் உள்ள எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நிர்வாண புகைப்படம் கிடைத்ததையடுத்து எமிலி ஷ்மிட்டுடன் பணிபுரியும் சக ஊழியர் “நிர்வாண புகைப்படத்திற்கு நன்றி” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த எமிலி நிர்வாண புகைப்படம் சென்றிருந்த 15 நபர்களிடத்திலும் மண்ணிப்பு கேட்டுள்ளார்.
அனுப்பப்பட்ட புகைப்படங்களில் குழந்தையின் பாதங்களும் பதிவாகியிருந்தன. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளதை எமிலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து எமிலி, தான் ஒரு நிமிடம் நிலை குலைந்துவிட்டதாகவும், பின்னர் சூழலை மெள்ள உணர்ந்து அதிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் அனுப்பப்பட்ட எண்களின் வரிசையில் எமிலியின் தந்தையின் எண்ணும் இருந்ததால் அவர் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளானதாகவும், ஆனால், தனது இரண்டு வயது மகளை கட்டுப்படுத்த தான் மிகவும் முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில், தன்னுடைய படம் தவறுதலாக அனுப்பபப்பட்டது குறித்து தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்ததையடுத்து இந்த நிகழ்வு நகைப்புக்குரிய ஒரு நிகழ்வாக மாறியது என்று எமிலி கூறியுள்ளார்.