அமெரிக்காவில் தனது முன்னாள் காதலியைக் கொன்ற உடல் பாகங்களை சாப்பிட்ட நபருக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தெற்கு இண்டியானாவைச் சேர்ந்த ஜோசப் ஓபர்ஹான்ஸ்லி, டம்மி ஜோ பிளாண்டனின் மரணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 18 அன்று கொலை மற்றும் கொள்ளை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
கிளார்க் சர்க்யூட் நீதிபதி விக்கி கார்மைக்கேல், ஜூரி பரிந்துரையின் அடிப்படையில் ஓபர்ஹான்ஸ்லிக்கு தண்டனை விதித்தார்.
46 வயதான பிளாண்டனின் உடல் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி காலையில் அவரது வீட்டில் மோசமாக சிதைந்து கிடந்தது.
பிளாண்டனின் உடலில் 25க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் இரண்டு கறுப்பர்கள் பிளாண்டனின் வீட்டில் இருந்ததாக ஓபர்ஹான்ஸ்லி சாட்சியம் அளித்துள்ளார்.
பிளாண்டனின் மரணத்திற்கும் அவரை அடித்து சாய்த்ததும் அவர்கள் தான் என்று ஓபர்ஹான்ஸ்லி நாடகமாடியுள்ளார்.
பிளாண்டனை தேடி பொலிசார் கதவைத் தட்டியபோது ஓபர்ஹான்ஸ்லி மயக்கத்திலிருந்த விழித்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், நடந்த விசாணையில் ஓபர்ஹான்ஸ்லி தான் பிளாண்டனை கொன்றார் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைக் குற்றச்சாட்டுக்கு இணையாக ஓபர்ஹான்ஸ்லிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.