இலங்கை சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் ஒரு அறிவிப்பு மிகவும் மகிழ்சியாக கூறியிருந்தார். விமானநிலையத்தை திறக்க மாட்டோம் என்றும் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவது காலவரையின்றி பிற்போடப்படுள்ளது. ஆனால் இதுவரை அழைத்து வந்தது அரசின் உறவினர்கள் ஆதரவாளர்கள் மட்டுமே அப்பாவி ஏழை மக்களின் நிலை…. எட்டும் மாதம் காத்திருந்து விட்டு இனி என்ன செய்யபோகின்றர்களோ ..?
வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவுதாகவும் அதனால்தான் நாட்டில் தேசிய விமான நிலையம் கடந்த ஆறு மாத காலமாக மூடப்பட்டுள்ளது என்றும் பெருமை பேசிய அரசியல் வாதிகளின் வாதம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் நம்பகத் தன்மையை இழக்க தொடங்கியுள்ளது. அவர்களின் பொய்யையும் புரட்டையும் மக்கள் புரிந்துகொண்டு விட்டனர்.
பணம் உள்ளவர் வருகிறார் பணமில்லாத ஏழைகள் முடங்கிக் கிடக்கின்றார்கள். ஆனால் இலங்கைக்கு சீனா காரர்கள் வந்து போகிறார்கள் மேலும் ஒருசில சுற்றுலா துறையினர் ரகசியமாக வந்து போகிறார்கள். ஆனால் சொந்த நாட்டு மகளை வரவழைக்கதான் அரசாங்கத்திற்கு மனசு இல்லை.
இந்தியர்களை அந்த நாட்டு விமானம் மூலம் அழைத்து வந்துள்ளனர், ஆனால் இலங்கை அரசுக்கு மத்திய கிழக்கில் நிர்க்கதியாக இருக்கின்ற நடுத்தர வகுப்பினரை அழைத்துவர முடியாமல் இருப்பது வேடிக்கையான விடயம்.
மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆண்டுதோறும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டி தருகிறார்கள் . இது இலங்கை ரூபாயில் ஒன்று தசம் மூன்று 1.3 ரில்லியன் ரூபாய்கள் ஆகும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்ப பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலைமையில் இவர்களை சொந்த நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது கவலையான விடயமாகும்.
charter flight மூலம் அவர்களை வரவழைத்து கொண்டாலும் அரசாங்கத்துக்கு வெறும் 300 மில்லியன் ரூபாய் தான் செலவாகும் என்று ஒரு பொருளாதார நிபுணர்கள் கணிப்பிட்டு கூறியுள்ளது. இந்தக் கணிப்பீடு கிட்டத்தட்ட சரியாகவே தோன்றுகின்றது. ஆனாலும் இலங்கை தொழிலாளர்களை முழுமனதுடன் அழைத்து வர இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் மனசு வரவில்லை. அவர்களை முழுமையாக உறிஞ்சி நார் எடுத்து பிழிந்து அவர்களை நெருக்கடிக்குள்ளாகி நிலையிலும் கூட அரசாங்கம் என்ற வகையில் வீடு திரும்ப போதிய வசதிகள் செய்து கொடுக்க அரசாங்கம் விரும்பவில்லை.
மத்திய கிழக்கில் உள்ளவர்கள் வேலைகளை இழந்து இருப்பிடத்தை விட்டு வெளியேறி நண்பர்களின் உறவினர்களின் ரூமில் வேண்டாத விருந்தாளிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமையில் இருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இயலாமையும் கஷ்டமும் நெருக்கடியும் மன அழுத்தமும் மத்தியில் தற்கொலையா வாழ்வா…? என்று இருந்து வருகின்றார்கள்
ஆரம்ப நாட்களில் கொரியா போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களை கௌரவப்படுத்தி அப்பிள் தோடம் பழம் கொடுத்து மீடியாக்களில் கண்ணில் மண்ணை துவிய அரச அதிகாரிகள் இப்போது எதுவும் பேசுவதில்லை.
மக்களின் பணத்தால் இயங்குகின்ற தேசிய விமான சேவை ஒரு நெருக்கடியான நேரத்தில் உதவாத முடியாத விமானம் பிறகு எதற்கு ..? இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் அரபு நாடுகளில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களையும் நாட்டுக்கு அழைத்து கொண்டு இருக்கின்ற நிலையில் ஒரு சிறிய மக்கள் தொகையை இலங்கை நாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு 50 ஆயிரம் மக்களை அழைத்துக் கொள்ள முடியாவிட்டால் என்ன ஒரு வேடிக்கையான விடயம்.
வீடு கட்ட வெளிநாடு போன போனவர் திரும்பி வர அந்த வீட்டை அடமானம் வைக்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இலங்கையர்கள்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள மனைவி ஒருவர் தன் தாலியை விற்று கத்தாரில் உள்ள தனது கணவனுக்கு சாப்பிட பணம் அனுப்பிய நிகழ்வு ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதக்கூடிய அந்த சாதாரண தொழிலாளிகளை நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க எந்த விதமான முறையும் திட்டமும் இல்லாமல் 6 மாத காலங்களாக முடங்கி அரபு நாடுகளில் வலியுடன் இருக்கின்ற இலங்கை மக்கள் வாழ்வா சாவா என்ற தருணத்தில் அங்கே முடங்கி இருகின்றார்கள்.
அவர்களைநாட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்கு பல வழிகள் இருக்கின்றன. விமானத்தின் மூலம் தான் அவர்களை அழைத்துவர வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. கப்பல்கள் மூலம் கூட அழைத்துக் கொண்டு வர முடியும் ஆனால் இந்த ஆட்சியாளர்களுக்கு அதற்கு மனம் இடம் கொடுப்பது இல்லை.
அதே நேரத்தில் ஒவ்வொரு இலங்கையர்களும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்று செல்லும்பொழுது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு பணத்தை கட்டிவிட்டு தான் வெளிநாடு போக வேண்டும். மக்களை ஏமாற்றி பணம் கறந்த இந்த அரசு தற்போது நிர்க்கதியாய் இருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு விமானத்தை அனுப்ப முடியாமல் இருப்பது என்ன வேடிக்கையான விடயம்.