கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த காலப்பகுதியில் 48 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 265 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா- மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்புடைய பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கம்பஹா மாவட்டத்தின் 19 காவல்துறை அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.