கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையை தொடர்ந்து நீர் நிலைகள் மற்றும் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 .30 அடியாக உயர்ந்ததை அடுத்து
தற்போது வினாடிக்கு மூவாயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேபோல் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 . 20 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அந்த அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோதையார் மற்றும் தாமிரபரணி ஆற்று பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



















