பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் போட்டியின் போது ரியோவின் உண்மையான முகம் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ரியோவை ரவுண்டு கட்டியுள்ளனர்.
இன்றைய ப்ரொமோ காட்சியில் மாஸ்க் அணிந்து செயல்படும் நபர்கள் யார்? யார்? என்று கமல் கேள்வி எழுப்ப ஒவ்வொரு போட்டியாளர்களும் மாஸ்க் அணிந்து விளையாடும் நபரை தெரிவு செய்துள்ளனர்.
இதில் ரியோவிற்கு அதிகமான மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாஸ்க் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது நியாயம் இல்லை என்று ரியோ ஆவேசமாக எழுந்துள்ளார்.