இத்தாலியில் கொரோனா பரவலுக்கு இடையே, 80 விருந்தினர்களுடன் நடந்த திருமண விழாவை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரோம் நகரின் தெற்கே பொண்டினியா நகராட்சியில் தொடர்புடைய திருமண விழாவானது பல மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, இத்தாலி அரசாங்கம், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட விழாக்களுக்கும் 30 பேர்களுக்கு மேல் கலந்துகொள்ள கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த நிலையிலேயே, லாசியோ பகுதியில் 80 விருந்தினர்களுடன் ஆடம்பர திருமண விருந்து ஒன்று கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட தகவல் வெளியானது.
துரிதமாக செயல்பட்ட பொலிசார், உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்து, திருமண விழாவினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, அந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தலா 400 யூரோ அபராதமாகவும் விதித்துள்ளனர்.
அபராதத்தொகையை அடுத்த சில தினங்களில் செலுத்துவோரிக்கு, சலுகையும் வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் இத்தாலியில் தனிப்பட்ட விருந்து கொண்டாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் திருமணங்களுக்கு மட்டும் 30 பேர்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.