உயிரிழப்பதற்கு முன்னர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதிவைத்த முன்னாள் கார் பந்த வீரரின் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் வசத்து வருபவர் இஜி உமேனேஷ். 72 வயதாகும் இவர் முன்னாள் கார் பந்தய வீரர். மேலும் பார்முலா ஒன், இந்தியா க்ரேண்ட் ஃப்ரிக்ஸில் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். சமீபத்தில் இருதய அருவை சிகிச்சை செய்துகொண்ட அவர் கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி கடிதத்தை எழுதியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியான கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் தற்போது என்னுடைய வாழ்க்கை முடிவடைந்தது, நான் விட்டுச் செல்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என நம்புகிறேன். அனைவரது வாழ்க்கையும் ஒரு நாள் முடிவடையும் அதற்குள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள் என தெரிவித்துள்ளார்.
பூமி என்ற கிராமத்தில் வாழும் மதமற்ற மக்கள், கணவன், மனைவி, திரையரங்குகள், நடிகர், நடிகைகள், சர்வதேச கார் பந்தய வீரர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயவாதிகள், கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்த கடிதத்தை சமர்பனம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உடலில் நன்றாக உள்ள உறுப்புகளை தானம் செய்வதாகவும் மீதமுள்ள தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.