ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான ஐஃபோன் 12 சீரிஸ் மொபைல்கள் தற்போது அறிமுகமாகியுள்ளன.
உலகின் முன்னணி ஸ்மார்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பில் ஒவ்வெரு ஆண்டும் புதிய மாடல் ஐபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஐபோன் 12 சீரிஸ் மொபைகள் எப்போது அறிமுகம் அகும் என்ற ஆவல் ஸ்மார்ட்ஃபோன் பிரியர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் 12 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
ஐபோன் 12 சீரிஸ், ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன்களில் ஆப்பிளின் ஏ 14 பயோனிக் எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 12 சீரிஸில் நான்கு மாடல்கள் உள்ளன. iPhone 12 mini, iPhone 12, iPhone 12 Pro, மற்றும் iPhone 12 Pro Max.
ஆகும்
இந்த ஆப்பிள் 12 சீரிஸ் ஐபோன்களின் சிறப்பம்சங்கள்:
iPhone 12,
ஐபோன் 12 ஒஎல்டி டிஸ்ப்ளே கொண்டது. மேலும் நீடித்த Ceramic Shield glass தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது 5G தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதோடு ஆப்பிள் ஐபேட் ஏர் இல் உள்ளதை போல A14 பயோனிக் SoC கொண்டுள்ளது. ஐபோன் 12 wide-angle sensors களை கொண்டுள்ளது. ஆப்பிள் 12 இன்னொரு சிறப்பம்சமாக நைட் மோட் டைம்-லேப்ஸைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் குறைந்த ஒளியிலும் தெளிவாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்
iPhone 12 mini
ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஏ 14 பயோனிக் SOC, 5 G தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதோடு ஐபோன் 12 இருப்பது போலவே கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. இது ஐபோன் 7 போன்ற 4.7 அங்குல ஐபோன்களை விட சிறியது மற்றும் இலகுவானது, அதே நேரத்தில் உங்களுக்கு நல்ல லுக்கை அளிக்கும்
iPhone 12 Pro,
ஐபோன் 12 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 14 ios ப்ராசசரை கொண்டுள்ளது. Deep Fusion machine learning technology அனைத்து கேமராக்களிலும் உள்ளது. மேலும் ஐபோன் 12 ப்ரோவில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இரண்டு வைட்-ஆங்கிள் சென்சார்கள் மற்றும் டெலிஃபோட்டோ சென்சார் கொண்டுள்ளது. இது 2.5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் ஜூம் ரேஞ்ச் 5 எக்ஸ் ஆகியவற்றை அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளது. மற்ற 12 சீரிஸ் போன்களை போலவே இதிலும் 5 தொழில்நுட்பம் உள்ளது.
iPhone 12 Pro Max
இதில் 6.7 இன்ச் 2778×1284 பிக்சலும் ஓஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆகும். இந்த மாடலானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது ஐஓஎஸ் 14 மூலம் இயக்கப்படுகிறது. இதில் டூயல் சிம் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டுக்காக ஐபி68 வசதி உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் மூன்று கேமரா வசதி இருக்கிறது. 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா 5P லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2 கொண்டுள்ளது.
இதில் லிடார் ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இதில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா அம்சம் இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ தொடர் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில் ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இதில் 5 ஜி தொழில் நுட்பம் 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5 அம்சம் இருக்கிறது.
ஐபோன் 12 சீரிஸ் போன்களின் விலைப்பட்டியல்
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் 12 சீரிஸ் மொபைல்கள் நவம்பர் 13 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுள்ளது. இந்தியாவில் ஐபோன் 12 79,900 ரூபாய்க்கும் ஐபோன் 12 மினி 69,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இதேபோல் இந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ 1,19,000 ரூபாய்க்கும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் 1,29,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுள்ளது