பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்தார். இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோ ஹெரோயின், 2 பிஸ்டல்கள், பாதாள உலகக்குழுவினர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றது, பாதாள உலகக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு என முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.



















