இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள கிரிக்கெட் திருவிழாவான தொடரில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். யப்னா ஸ்டாலியன்ஸில் இந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கெட் ஆட்டங்களில் கலக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகரட்ணம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஷன், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய வீரர்கள் இந்த தொடரில் இடம்பிடித்தனர்.
இந்த தொடரில் கொழும்பு கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ளை ஹோர்க்ஸ், கண்டி டஸ்கஸ் மற்றும் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டாலியன்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை பெயரிடும். மொத்தம் 100 வீரர்கள் பெயரிடப்படவுள்ள நிலையில், இதுவரை 93 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். வரும் 1ஆம் திகதிக்குள் இன்னும் 7 வீரர்கள் பெயரிடப்படுவார்கள். யாழ்ப்பாண அணிக்கு இன்னும் 2 வீரர்கள் பெயரிடப்படவுள்ளனர். இதில் தமிழ் வீரர்கள் யாராவது இடம்பிடிப்பார்களா என்பது உறுதியாகவில்லை.