இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது.
அதன்படி இந்தத் தொடரில் கிறிஸ் கெய்ல், ரஸல், டுபிளெஸிஸ் என வெளிநாட்டு வீரர்கள் பலரும் இந்தத் தொடரில் பலரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ளை ஹோர்க்ஸ், கண்டி டஸ்கஸ் மற்றும் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டாலியன்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.
இறுதி அணி விபரம் வெளியாகியுள்ளது. நவம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் இன்னும் சில வெளிநாட்டு வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
முன்னாள் இலங்கை கப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், முன்னாள் தென்னாபிரிக்க கப்டன் ஃபஃப் டு பிளெசிஸ் மற்றும் ஜமைக்காவின் ஓல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் உரிமையாளர்கள் நட்சத்திர வீரர்களை தெரிவு செய்தார்கள்.
டேவ் வாட்மோர், கொழும்பு அணியின் பயிற்சியாளராக தெரிவாகியுள்ளார்.
கண்டி டஸ்கர்ஸ் குஷால் ஜானித், கிறிஸ் கெய்ல் மற்றும் லியாம் பிளங்கெட் ஆகிய நட்சத்திர வீரர்களை வாங்கியது. அணியின் பயிற்சியாளராக ஹஷன் திலகரத்ன உள்ளார்.
காலி கிளாடியேட்டர்கள் லசித் மலிங்க, ஷாஹித் அப்ரிடி மற்றும் கொலின் இங்க்ராம் ஆகிய நட்சத்திர வீரர்களை வாங்கியது. அணிக்கு பயிற்சியாளராக மொயின் கான் இருப்பார்.
தம்புள்ளை ஹோர்க்ஸ் அணியில் தஷூன் ஷானக்க, டேவிட் மில்லர் மற்றும் கார்லோஸ் பிராத்வைட் ஆகிய நட்சத்திர வீரர்கள் வாங்கப்பட்டனர். ஜோன் லூயிஸ் பயிற்சி அளிப்பார்.
யப்னா (யாழ்ப்பாண) ஸ்டாலியன்ஸில் திசாரா பெரேரா, டேவிட் மாலன் மற்றும் வணிந்து ஹசரங்கா ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் 2020 நவம்பர் 21 முதல் டிசம்பர் 13 வரை இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது – கண்டியில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம். 15 நாட்களுக்குள் அணிகள் 23 போட்டிகளில் போட்டியிடும்.