கர்ப்பக்காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய சத்தான பொருள்களில் பேரீச்சம்பழமும் ஒன்று.
கர்ப்பக்கால நீரிழிவை உண்டாக்கிவிடும் என்று இனிப்பை ஒதுக்கிவிடும் கர்ப்பிணிகள் பேரீச்சம்பழத்தையும் ஒதுக்கிவிடுவதுண்டு. ஆனால் பேரீச்சம்பழம் இயற்கையான சர்க்கரை கொண்டவை.
இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்காமல் உடைந்து ஆற்றலை வழங்குகிறது. இது இனிமையாக இருக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை. இது இயற்கையான சர்க்கரையே என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.
இயற்கையாக ப்ரக்டோஸை கொண்டிருப்பதால் இது கர்ப்பக்கால சோர்வுக்கு எதிராக போராடும் ஆற்றலை தரக்கூடும். இது ஃபோலேட் நிறைந்த மூலமும் கூட.
இவை கர்ப்பிணிக்கு இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கே வை வழங்குகின்றன. இரும்புச்சத்து இருப்பதால் ஆற்றலை வழங்ககூடியது. ரத்த சோகை தவிர்க்க செய்யும். பேரீச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் கே கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பை வலுவாக வைத்திருக்க உதவும்.
இது பொட்டாசியம் நிறைந்த மூலம் என்பதால் கர்ப்பிணியின் ரத்த நாளம் நிதானமாகவும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் சிறந்த எலக்ட்ரோலைட் போன்று செயல்படக்கூடும்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு வைட்டமின் கே சத்து நிறைவாக இருக்க வேண்டும்.
இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பிணி கருவுற்ற நாள் முதல் பேரீச்சம்பழம் எடுத்துகொள்ளும் போது குழந்தையின் எலும்பு வளர்ச்சி பலமாக இருக்கிறது. பிரசவத்துக்கு பிறகும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு வைட்டமின் கே கிடைக்கிறது.
இதில் இருக்கும் மெக்னீசியம் மற்றொரு தாது சத்து. இது குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகள் உருவாக்கத்துக்கு உதவுகிறது. இது ரத்த அழுத்த அளவையும் ,கர்ப்பகால ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. மெக்னீசியம் குறைபாட்டை தடுக்க உதவுவதோடு நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம், நஞ்சுக்கொடி செயலிழப்பு மற்றும் முன்கூட்டி பிரசவம் உண்டாவதை தடுக்கிறது.
பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் நிறைவாக இருக்கிறது இது கர்ப்பிணியின் உடலில் நீர் மற்றும் உப்பு அளவை சீராக பராமரிக்கிறது. இதனால் உடலில் ரத்த அழுத்தம் சீராகிறது.
கர்ப்பிணிக்கு உண்டாகும் தசைப்பிடிப்பை தவிர்க்கிறது.
கர்ப்பக்காலத்தில் பொட்டாசியம் குறைந்தால் அது கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம், இதய நோய்கள் பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடவும் வாய்ப்புண்டு இவையெல்லாவற்றையும் பேரீச்சம் பழம் தடுத்துவிடுகிறது.
எனவே இனி பேரீச்சம்பழம் சாப்பிட மறக்காதீங்க. அப்படியே டாக்டர் ஆலோசனையையும் தவிர்க்காதீங்க.