கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா தொற்றினால், இரண்டாயிரத்து 266 பேர் பாதிக்கப்பட்டதோடு, 32பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 954பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9ஆயிரத்து 826பேர் உயிரிழந்துள்ளனர்.
22ஆயிரத்து 614பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 73ஆயிரத்து 514பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 215 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.