தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தமாக 691 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைதானவர்களிடமிருந்து 92 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



















