தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்ட தனியார் பேருந்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நேற்று பிற்பகல் கொழும்பு – கண்டி பிரதான வீதி, தங்ஓவிட்ட பகுதியில் வைத்து பஸ்ஸை நிறுத்தி அங்கிருந்த பயணிகளை ஏற்றிய நெடுந்தூர போக்குவரத்து சேவை தனியார் பஸ்ஸொன்றுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த பஸ்ஸில் ஏற்றப்பட்ட பயணிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தல் வழங்கியதுடன் அப் பயணிகள் வேறு இரு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
குருணாகல் தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸின் நடத்துனர் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி சட்ட நடவடிக்கைகளுக்காக நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.