மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஹகொட, குடாபான சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முலடியன பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கிளை வீதியினூடாக பிரதான வீதிக்கு வந்த டிப்பர் வாகனத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்துள்ள சிறுமி 13 வயதுடைய கோமில, மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.