கட்சியின் முடிவை மீறி, ராஜபக்ச சகோதரர்கள அ.அரவிந்தகுமார் ஆதரித்ததையடுத்து, அவரை இடைநிறுத்துவதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்திருந்தார்.
அவரது முடிவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு இன்று ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியது.
அவரது கூட்டணி அங்கத்துவத்தை முழுமையாக நீக்கும் முடிவை அரசியல் குழுவும், சட்ட நடவடிக்கையை கூட்டணி பங்காளி கட்சி மலையக மக்கள் முன்னணியும் எடுக்கும். இதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் பங்காளி கட்சிகள் வழங்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில், கூட்டணியின் பிரதி தலைவர்கள் பழநி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் மற்றும் பொதுசெயலாளர் சத்திரா சாப்டர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.