யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
பேலியகொட மீன் சந்தையில் தோன்றியுள்ள கொரோனா கொத்தணியையடுத்து, அங்கிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறைந்தது ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
இது குறித்து இன்று மாலை உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகும்.