இன்று மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் நாட்டில் 865 பேருக்கு தொற்று உறுதியாகியது.
இலங்கையில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவான நாள் இன்றாகும்.
நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,153 ஆக அதிகரிக்கிறது.
இன்று அடையாளம் காணப்பட்ட 865 தொற்றாளர்களில், 535 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள். 257 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள். 48 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருப்பவர்கள். பேருவளை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 20 பேர் மற்றும் காலி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 5 பேர் அடங்குகிறார்கள்.
இதன்படி மினுவாங்கொட-பேலியகொட கொரோனா தொற்று அலையில் 3,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 3,495 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 24 மணித்தியாலத்தில் 83 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,644 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்று சந்தேகத்தில் 426 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.


















