நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 201 பேர் சற்றுமுன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்த 37 பேர், மீன் சந்தையில் பாதிக்கப்பட்டோர் 24 பேர் மற்றும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 140 பேருக்குமே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரையில் 7,153 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.