யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை, சுகாதார துறையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தென்னிலங்கையை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் ஒருவர் இன்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் தப்பி ஓடிய நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள், அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.