ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பதால் தன்னிடம் இருந்த ஃப்ரீ பாஸை பயன்படுத்தி தப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளது நிகழ்ச்சிக்குழு.
இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நடிகை ரேகா குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தார்கள். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் வெளியேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஆரி குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பதால் தன்னிடம் இருந்த ஃப்ரீ பாஸை பயன்படுத்தி தப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாடகி சுசித்ரா இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து இன்றும் நாளையும் அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் உரையாட இருக்கும் கமல் இன்று கையில் செங்கோல் உடன் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.