கரிபியன் தீவான பஹாமாஸ் விமானநிலையில் தரையிறங்கும் போது அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியாமியில் இருந்து பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA4194 பஹாமாஸின் ஃப்ரீபோர்ட்டில் தரையிறங்கியது போது ஓடுபாதையிலிருந்து வெளியேறி புல்வெளியில் ஓடி விபத்துக்குள்ளாது.
விமானத்தில் 28 பேர் பயணித்த நிலையில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், லேண்டங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIA) இப்போது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
— Breaking Aviation News & Videos (@breakingavnews) October 24, 2020