முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 68 வது படைப்பிரிவின் திம்பிலி பகுதியில் அமைந்திருக்கின்ற இராணுவ பயிற்சி முகாமில் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 146 பேர் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் (23) இவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
நேற்றைய தினம் (24) பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினமும் (25) பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்கள் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தொற்றுக்குள்ளான 13 பெயரையும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















