இந்தியாவில் திருமணமான 28 வயது நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மூவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). இவர் அங்குள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டில் மேகா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மேகா சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில், மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள், தலைமை நர்ஸ்களின் துன்புறுத்தலால் இந்த முடிவை எடுப்பதாக எழுதப்பட்டிருந்ததோடு அவர்களின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், மேகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.
அவர் கணவர் வேறு ஊரில் தங்கி பணி செய்கிறார். மேகா தனது தாயாருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
அவர் தற்கொலை தொடர்பான புகாரின் அடிப்படையில் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு தலைமை நர்ஸ்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.
குற்றவாளிகள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என கூறியுள்ளனர்.