அண்மையில் கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துர மதுஷ் டுபாயில் 3 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
400 கோடி ரூபாய் பணம் செலவிட்டு அவர் குறித்த ஹோட்டலை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
60 அறைகளை கொண்ட இந்த ஹோட்டலில் நீச்சல் குளங்கள், நிகழ்வு மண்டபங்கள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் விற்பனையில் கிடைத்த வருமானத்தில் இந்த ஹோட்டல் கொள்வனவு செய்வதற்கு மதுஷ் முதலீடு செய்யதுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஹோட்டலை கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மதுஷ் கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மாகந்துரே மதுஷ் போலி பெயரில் விமான கடவுச்சீட்டு தயாரித்து டுபாய் நாட்டில் தங்கியிருந்தமையினால் அவர் இந்த ஹோட்டலை தனக்கு நெருக்கமான இந்திய நாட்டவரின் பெயரில் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.