இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட இளம்பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்ஸி தீவைச் சேர்ந்த Carys Ann Ingram (22) மான்செஸ்டரில் கல்வி பயின்று வந்துள்ளார்.
மான்செஸ்டரிலிருந்து ஜெர்ஸி தீவுக்கு பயணப்பட்ட Ann, தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதற்கு பதிலாக ஹொட்டல் ஒன்றிற்கும், நண்பர் ஒருவரின் வீட்டிற்கும் சென்றதோடு ஷாப்பிங்கிற்கும் சென்றுள்ளார்.
இதற்கிடையில், Ann பயணித்த விமானத்தில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பது பின்னர் தெரியவந்ததால், Annஐ தொடர்புகொண்ட அதிகாரிகள் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், எட்டு நாளுக்குப் பின் கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் பின் பல முறை அவரை அவரது வீட்டுக்கு சென்று தொடர்புகொள்ள முயன்றுள்ளனர் அதிகாரிகள். ஆனால், அவர் வீட்டில் இல்லை.
இந்நிலையில், ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற Ann, ஹொட்டலில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை வைத்து அவரை ட்ரேஸ் செய்த அதிகாரிகள், விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
சுய தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக அவருக்கு 6,600 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் அவர் 24 வாரங்கள் சிறை செல்ல நேரிடும்!