நேற்றைய தினம் பிக்பாஸ் தொடர் ஒளிபரப்பாக 4 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் ‘சுமங்கலிகள்’ பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று முழுவதும் தொடர்ந்த இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயன்றும், அவர் பேச மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், அனிதா கண்ணீர் விட்டு கதறி அழுவதையும், பிக்பாஸ் வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் கூறியதில் தவறில்லை என்றும் அவர் சொல்லிய வார்த்தைகள் தான் தவறு என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.