அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதன்போது, உங்கள் நாடு ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நேரத்தில் நீங்கள் ஏன் இத்தகைய விஜயம் செய்தீர்கள்? அரசியல் மாற்றங்கள் இருந்தால், நீங்கள் எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்காது, இல்லையா? என செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
பொம்பியோ பதிலளித்தபோது, நீண்டகால அமெரிக்க-இலங்கை நட்புக்காக நான் வந்தேன். எனது வருகையால் இரு நாடுகளும் இடையில் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்துவது மட்டுமே அவசியம் என்றர்.
எம்.சி.சி மற்றும் சோபா ஒப்பந்தங்கள் போன்ற இலங்கையின் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து உங்கள் வருகை முடிவுகளை எடுக்கப் போகிறதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது,
இலங்கையின் சுதந்திரத்துக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ தீங்கு விளைவிக்கும் எதையும் விவாதிக்க எங்களுக்கு விருப்பமில்லை. இலங்கையில் மட்டுமல்ல, இந்த விஜயத்தின் போது நான் சந்தித்த பிற சிறு நாடுகளிலும் நாங்கள் கலந்துரையாடினோம். அந்த சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம்.