குறுகிய வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனான டிக் டாக்கினைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது.
அந்த அளவிற்கு உலகப்பிரபல்யம் பெற்ற அப்பிளிக்கேஷனாக காணப்படுகின்றது.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் ஏனைய நாடுகளில் கொடிகட்டிப்பறக்கின்றது.
இப்படியிருக்கையில் பிரபல ஒன்லைன் சொப்பிங் தளமான Shopify ஆனது டிக் டாக் நிறுவனத்துடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் ஒரு மில்லியனிற்கும் அதிகமான வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களை டிக் டாக்கின் ஊடாக இலகுவாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என அந்நிறுவனம் கருதுகின்றது.
கனடிய நிறுவனமான Shopify இன் ஒன்லைன் வியாபார தளத்தில் சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்கள் இணைந்து தமது பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
அதேநேரம் டிக் டாக்கிலும் சுமார் 100 மில்லியன் வரையான பயனர்கள் இருக்கின்றனர்.
எனவே அவர்களிடம் இவ் விளம்பரங்களை இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.