கடமைகள் நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டு மீண்டும் காவல்நிலையத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவால் பியகம காவல்நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் சுகயீனமுற்ற குறித்த பொறுப்பதிகாரி கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 51 வயதுடைய பியகம காவல் நிலைய பொறுப்பதிகாரி நீர்கொழும்பு பகுதியில் வசித்து வந்தவர் எனவும், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
திடீர் மாரடைப்பு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.