தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மனமுறைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்த தம்பதி பன்னீர்-மரியா. இவர்களுக்கு ஜாய்ஸ் பிரியா என்ற மகள் இருந்தார்.
ஜாய்பிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்தார்.
இவரும் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பரத், ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாய்ஸ் பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் பொலிசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தனது மகளை 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் பரத் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஜாய்ஸ் பிரியாவின் தந்தை பன்னீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பொலிசார் தலைமறைவான பரத்தை தேடி வருகின்றனர்.