பிரான்சில் பாதிரியார் ஒருவர் தேவாலயத்தை மூடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டதால், அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரான்சின் Lyon பகுதியில் இருக்கும் தேவாலயம் ஒன்றை கிரேக்க மரபுவழி பாதிரியார் ஒருவர் மூடிக் கொண்டிருந்த போது, திடீரென்று மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடந்த நிலையில், அவர் வயிற்றில் ஏற்பட்ட காயத்துடன், மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
தாக்குதல் நடத்தியவன் தனியாக இருந்ததாகவும், வேட்டையாடும் துப்பாக்கியிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
#BREAKING: Priest shot and killed inside Greek Orthodox Church in Lyon, France. Suspect is on the run. pic.twitter.com/2kCoxp2Ka2
— UA News (@UrgentAlertNews) October 31, 2020
துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடிப்பதற்காக பொலிசார் தீவிரமாக தேடி வருவதால், பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக இல்லை. பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இது மிகவும் கடுமையான சம்பவம், இது குறித்த விவரங்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் நீஸ் நகரில் தீவிரவாதி ஒருவன் தேவலாயம் ஒன்றி நடத்திய மிருகத்தனமான கத்தி குத்து தாக்குதலில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதுமட்டுமின்றி கடந்த வெள்ளிக்கிழமை, தலைநகர் பாரிஸில் ஒருவர் பொலிசாரை கத்தியால் தாக்க முயன்றார்.
உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் நேற்று, நாம் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளோம், பிரான்ஸ் மண்ணில் மேலும் தாக்குதல்கள் நிகழக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்று எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.