Oppo நிறுவனமானது எதிர்வரும் நொவெம்பர் 4 ஆம் திகதி Oppo K7x எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
5G தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் 2GHz octa core processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM, மற்றும் 64GB, 128GB அல்லது 256GB சேமிப்பகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 5,000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.