பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் எப்போது கிடைக்கும் என்பது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தோன்றியதிலிருந்து கிட்டத்தட்ட 200 தடுப்பூசிகள் ஆய்வில் உள்ளது, அதில், குறைந்தது 15 மனித சோதனைகளில் உள்ளது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி 3,65,000 பேரிடம் மேற்கொண்ட புதிய ஆய்வில், கொரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் கால் பகுதிக்கும் மேல் குறைந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது.
இதனால் வெற்றிகரமான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அது வருடத்திற்கு இரண்டு முறை போடப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு மேற்கொண்டு வரும் சோதனைகளின் சமீபத்திய தகவல்கள், தடுப்பூசி வயதானவர்களிடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது.
அதே சமயம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் இந்த ஆண்டு தயாராக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிலும் தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. சீனா தடுப்பூசி உருவாக்கும் பந்தயத்தில் முன்னேறுகிறது என்பதற்கான சில அறிகுறிகளும் உள்ளன.
ஜேர்மன் தடுப்பூசி கிறிஸ்துமஸுக்கு முன்பு விநியோகிக்க தயாராக இருக்கக்கூடும் என்று அமெரிக்க நிறுவனமான Pfizer நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறினார்.
அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான Pfizer அக்டோபரில் தடுப்பூசி உற்பத்தி செயல்முறையைத் தொடங்கியதாக அறிவித்த பின்னர், நாற்பது மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குளிர்காலத்தில் பிரித்தானியாவுக்கு அனுப்பப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.