90களில் இருந்த நாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை சிம்ரன். இவர் திருமணம் செய்கிறார் என்ற செய்தி வந்ததும் ஒட்டுமொத்த தமிழ்நாடே கொஞ்சம் வருந்தியது என்று கூறலாம்.
திருமணத்திற்கு பின் நடிப்பாரா இல்லையா என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அவர் திருமணம், குழந்தைகள் வந்த பிறகு நடிப்பில் களமிறங்கினார்.
ஆனால் முன்பு அளவிற்கு அவருக்கு சரியான படங்களும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது மகனுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளில் கொண்டாடப்படும் Halloweenனுக்காக அவரும் ஒருவித மேக்கப் போட்டு அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
இதோ பாருங்க,
https://twitter.com/SimranbaggaOffc/status/1322405688287526913