தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய பிரபலமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது.
சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது, அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்திலும் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்க்கு கேரளாவிலும் தமிழகத்திற்கு சமமாக ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி Shylock என்ற தனது திரைப்படத்தில் அதிகமாக தளபதி விஜய்யின் டயலாக்கை பேசி அசத்தியுள்ளார்.
மேலும் தற்போது அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு.