அரச அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சொந்தமான காணிகளை , போலி காணி உறுதிகளை தயாரித்து விற்பனை செய்வது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளி தொடர்பாக சட்டமா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த காணொளி சம்பந்தமான விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்து, 7 தினங்களுக்குள் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலவந்தமாக காணிகளை கைப்பற்றி, போலி காணி உறுதிகளை தயார் செய்து, அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவிந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களே ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.