பிரித்தானியாவில் ஆபத்தான வகையில் கார் ஓட்டி சிக்கிய ஒருவரை, நீதிபதி சிறைக்கு அனுப்புவதிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
Gurdeep Notay (33) என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆபத்தான முறையில் கார் ஓட்டி ஒரு பெண்ணின் கார் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது அவருக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் உடனடியாக சிறைக்கு செல்லவேண்டியதில்லை, ஆனால், பொலிசாரின் கண்காணிப்பில் இருப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மீண்டும் ஆபத்தான முறையில் கார் ஓட்டி சிக்கினார் Gurdeep. இம்முறையும் Gurdeep சிறையிலடைக்கப்படவில்லை! காரணம், Gurdeepக்கு இரண்டு பிள்ளைகள், அவர்களையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்காக ஏற்கனவே கஷ்டப்பட்டு வேலை செய்துவருகிறார் Gurdeep. இதில், அவருக்கு மூன்றாவது குழந்தை வேறு பிறக்க இருக்கிறது.
ஆகவே, அந்த குழந்தைகளின் நலன் கருதிதான் Gurdeep சிறைக்கு அனுப்பப்படவில்லை. ஆனாலும் 21 மாதங்களுக்கு அவர் பொலிசாரால் கண்காணிக்கப்படுவார்.
தீர்ப்பளித்த நீதிபதி, நீங்கள் பொறுப்பற்று நடந்துகொண்ட ஒரு மனிதர்தான், ஆனாலும், நீங்கள் செய்த தவறுக்காக உங்கள் பிள்ளைகள் தண்டிக்கப்படக்கூடாது என நான் நினைக்கிறேன், அதனால்தான் உங்களை நான் சிறைக்கு அனுப்பவில்லை என்றார்.