சுவிட்சர்லாந்தில் மர வேலை செய்யும் முதியவர் ஒருவர் மரணமடைந்த நிலையில், அவரிடம் பழுதுபார்க்க அளித்த மர குதிரையின் உரிமையாளரை அந்த குடும்பம் தேடி வருகிறது.
St. Gallen மண்டலத்தில் மர வேலை செய்வதில் பெயர் வாங்கியவர் Albert Spirig. இவர் செப்டம்பர் மாத இறுதியில் முதுமை காரணமாக திடீரென்று மரணமடைந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, தமது 21 வயது பேத்தியிடம், மர குதிரை ஒன்றை பழுது நீக்கி வைத்துள்ளதாகவும், உரிமையாளருக்கு அளிக்கும்படியும் கூறியுள்ளார்.
ஆனால், சில நாட்களில் அந்த குதிரை தொடர்பில் Albert Spirig குடும்பத்தினர் மறந்து போயுள்ளனர். மட்டுமின்றி, அந்த மர குதிரையின் உரிமையாளர் தொடர்பில் தகவல் சேகரிக்கவும் மறந்துள்ளனர்.
தற்போது Albert Spirig மரணமடைந்துள்ள நிலையில், அந்த மர குதிரை அவரின் தொழிற் கூடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், Albert Spirig கூறியபடி, குதிரையின் உரிமையாளரை அவரது குடும்பம் தேடி வருகிறது.
அந்த மர குதிரையை ஒரு பெண்மணி வந்து பழுது நீக்க அளித்ததாக மட்டுமே தற்போது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் அவர் யார் என்பதும், இதுவரை ஏன் அந்த குதிரையை வாங்க வரவில்லை என்பதற்கும் இவர்களிடம் பதில் இல்லை.