அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயமானது ஒருவருக்கும் தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மந்திரிக்கப்பட்ட பிரித் நீரை ஆற்றில் இட்டுவரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதனை நிறுத்திவிட்டு முதலில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.