திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆய்வாளர் மீது எஸ்.டி எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோட்டை சேர்ந்தவர் காளிமுத்து, இவரது மனைவி காமாட்சி (35) திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆய்வாளர் டேவிட் என்பவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்ணீர் டேங்க் கீழே உள்ள அலுவலகத்தில் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் ஆபாசமான வார்த்தைகளை பேசி தன்னை அழைத்ததாகவும் காமாட்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே காவல் துறையினர் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு எதிரான கொடுமை சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.