அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஜோ பைடன் வெற்றி பெற்று, ட்ரம்ப் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறை போட்டியிட்டு தோல்வியடையும் முதல் அதிபர் என்ற பெயர் அவருக்கு கிடைக்கும்.
அமெரிக்க வரலாற்றில் கடந்த நூறு ஆண்டுகளில் இதுவரை நான்கு அதிபர்கள் மட்டுமே இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிடும்போது தோல்வியடைந்துள்ளார்கள்.
George HW Bush 1968ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிய Republican ஆட்சி, 1992ஆம் ஆண்டு George HW Bushஇன் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
George HW Bush வெற்றியடைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமோக ஆதரவுடன் கிளிண்டன் வெற்றி பெற்றார். Jimmy Carter 1980ஆம் ஆண்டு Democratic கட்சியின் Jimmy Carter இரண்டாவது முறை அதிபர் தேர்தலில் நிற்கும்போது, அவர் Ronald Reaganஇடம் தோற்றுப்போனார்.
Gerald Ford 1976ஆம் ஆண்டு, Republican கட்சியினரான Gerald Ford, Jimmy Carterஇடம் தோற்றுப்போனார்.
Herbert Hoover 1932ஆம் ஆண்டு Republican Herbert Hoover, Democratic கட்சியினரான Franklin D Rooseveltஇடம் தோற்றுப்போனார்.
விரைவில் 2020ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகள் வர இருக்கும் நிலையில், ட்ரம்ப், ஜோ பைடன் ஆகிய இருவருமே தாங்கள் முந்துவதாக தெரிவித்தவண்ணம் உள்ளார்கள்.
என்றாலும், தேவையான 270 எலக்டோரல் வாக்குகள் இருவருக்குமே இன்னமும் கிடைக்கவில்லை. சமீபத்தைய முடிவுகளின்படி ஜோ பைடனுக்கு 264 இடங்களும், ட்ரம்புக்கு 214 இடங்களும் மட்டுமே கிடைத்துள்ளன.
இது வரை வெளியான முடிவுகளின்படி ஜோ பைடன் முன்னணி வகிக்கிறார். அப்படி அவர் வெற்றி பெற்று, ட்ரம்ப் தோல்வியடைய நேர்ந்தால், George HW Bush, Jimmy Carter, Gerald Ford மற்றும் Herbert Hoover வரிசையில் அவரும் சேரவேண்டியிருக்கும்!