பேச்சுரிமை என்ற பெயரில் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தி, அதனால் பல நாடுகளில் பிரச்சினைகள் வெடித்த நிலையிலும், பிரான்ஸ் சர்ச்சையை நிறுத்தியதுபோல் தெரியவில்லை.
தற்போது சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற இருக்கிறது அந்நாடு. அந்த சட்டத்தின்படி, ஒரு பெண் நோயாளி, தான் ஒரு ஆண் மருத்துவரை பார்க்க விரும்பவில்லை என்றோ, ஒரு ஆண் நோயாளி, தான் ஒரு பெண் மருத்துவரை பார்க்க விரும்பவில்லை என்றோ கூற முடியாது.
அப்படிக் கூறினால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 75,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.
Anti-discrimination law என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தின்படி, எதிர் பாலரான மருத்துவரை சந்திக்க மறுத்தல், பாலின பாகுபாடு காட்டுவதாக கருதப்படும்.
இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார். ஆனால், பிரான்ஸ் சுகாதாரத்துறையின் இணையதளத்தில், சட்டப்படி ஒவ்வொரு
நோயாளிக்கும் தனது மருத்துவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.