திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லடிப் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று மாலை அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேருநுவர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் பெக்கோ இயந்திரம் மூலம் குறித்த இடம் தோண்டப்பட்டுள்ளது.
இருந்த போதும் அங்கிருந்து ஆயுதங்கள் ஏதும் மீட்கப்படவில்லை எனவும், இதனையடுத்து குறித்த இடம் மூடப்பட்டு அகழ்வுப்பணி நிறுத்தப்பட்தாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் தற்போது தப்பத்த ரஜமஹா விகாரை இருப்பதோடு யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் படைமுகாம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அகழ்வு பணி இடம்பெற்ற இடத்தில் முப்படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















