ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரச நிறுவனங்கள் வெளிநாடுகளை தளமாக கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதை முற்றாக தடைசெய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் எவ்வித ஆராய்வுகளும் இன்றி அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இப்படியான உடன்படிக்கைகளை செய்துக்கொண்டமையே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை கடந்த காலத்தில் கனேடிய அரசாங்கத்துடன் இவ்வாறான உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரங்கள் அவர்களில் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரச நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துக்கொள்வதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



















